குஷிநகர் விமான நிலையத்தைச் சென்றடைந்த நாமல் உட்பட்ட குழுவினர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் 260 கோடி ரூபாய் இந்தியமதிப்பில் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை விமானம் முதலாவதாக தரையிறங்கியது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஸ (Namal Rajapaksa)உள்ளிட்ட குழுவினர், குஷிநகர் விமான தளத்தில் தரையிறங்கினர்.
இந்த விமானத்தில் 100 பெளத்த பிக்குகளும் சென்றுள்ளனர். கெளத்தம புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததாக கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க புனித நகராக குஷிநகர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தர் மகாபரி நிர்வாணம் அடைந்த இடம் மற்றும் புத்தரின் யாத்திரை தலங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குஷிநகர் விமான நிலையம் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment