Header Ads

test

நாய்களை கொன்று உணவாக்கிய தம்பிதியினர் கைது.

 நாய்களை கடத்திக் கொன்று உணவுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வகையில் ஆறு நாய்களைக் கொண்டு சென்ற தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்பதியினர் தெருநாய்களை பிடித்து, கொன்று இறைச்சியாக்கியதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

42 வயதான ஆண் ஒருவரும், 38 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர்கள் கொழும்பு 2 பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்டுகின்றது.

சந்தேகநபர்கள் இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தம்பதியினர் தொடர்பாக உளவியல் பரிசோதனை நடத்துவதற்கு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  



No comments