வீதியில் உயிருக்கு போராடிய ஆசிரியரை காப்பாற்ற யாரும் முன் வராததால் ஏற்பட்ட பரிதாபம்.
வீதியால் சென்று கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் பதுளை - ஹப்புத்தளை நகரில் மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளைப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பாடசாலையொன்றில் கற்பிற்கும் 51 வயதுடைய தமிழ் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வீதியில் மயங்கி வீழ்ந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல எவருமே முன்வராததன் காரணத்தினால் 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டு, அம்புலன்ஸ் ஊடாக அவர் ஹப்புத்தளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குறித்த ஆசிரியருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதிதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment