Header Ads

test

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.

 முல்லைத்தீவு - பெரியகுள பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருகையில்,

நெடுங்கேணியில் இருந்து வெலிஓயா பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் எதுவித காயங்களுக்கும் உள்ளாகாத நிலையில் மோட்டார் சைக்கிள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





No comments