கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற குடும்பஸ்த்தர் மாயம்.
பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடும் பணியில் பூண்டுலோயா காவல்துறை பாதுகாப்பு பிரிவினரும், நுவரெலியா இராணுவத்தினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment