மட்டக்களப்பில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்திய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம்.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்துமாறு தாம் வழங்கிய சைகையை மீறிச் சென்றவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்களை கடுமையாகத் தாக்கியிருந்தார்.
குறித்த சம்பவம் காணொளியாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment