Header Ads

test

கட்டுநாயக்காவில் நபர் ஒருவர் அதிரடியாக கைது.

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களை தனது உடலில் மறைத்து வைத்துக் கொண்டு வெளியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. விமான நிலைய துப்பரவு செய்யும் பிரிவில் கடமையாற்றும் 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 4,848 கிராம் நிறையுடைய 48 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தங்க பிஸ்கட்கள் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியுடையவை எனவும் குறித்த தங்க பிஸ்கட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments