வன்னி மாவட்டத்தின் புதிய காவல்துறைமா அதிபர் நியமனம்.
வன்னி மாவட்டத்தின் புதிய காவல்துறைமா அதிபராக கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையி்ல் இன்று காலை வன்னிப்பிராந்திய புதிய பிரதி காவல்துறைமா அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த திங்கட்கிழமை வன்னி பிராந்தியத்தில் பணியாற்றிய பிரதிப் காவல்துறைமா அதிபர் லால் செனவிரத்தின ஓய்வு பெற்று சென்றுள்ளார்.
இந்நிலையிலேயே இன்று காலை சுபநேரத்தில் புதிய பிரதி காவல்துறைமா அதிபராக கொழும்பு மாவட்ட போக்குவரத்துத் தொடர்பாடல் பிரிவிவு பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் .
Post a Comment