யாழில் இன்று அதிகாலையில் தாய்க்கும் மகனுக்கும் நடந்தேறிய கொடூரம்.
யாழ்.நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கியதுடன் வீட்டிலிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாவற்குழி மேற்கிலுள்ள வீடொன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடர்கள், வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கியதில் 17 வயதான மகனின் கை முறிவடைந்துள்ளதுடன் 42 வயதான தாயின் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி வரை வீட்டில் தேடுதல் நடத்திய திருடர்கள், வீட்டிலிருந்த 2,500 ரூபா பணம், கைத்தொலைபேசி போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Post a Comment