வீடொன்றில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலி மாவட்டத்தில் வீடொன்றில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை ஊரகஸ்மங்ஹந்திய - கொரகீன பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணும், ஆணொருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். சம்பவத்தில் கொரகீன பகுதியில் வசித்துவந்த 39 வயதுடைய ஆணொருவரும், 38 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டின் ஒரு அறையில் கட்டிலில் பெண்ணின் சடலம் காணப்பட்டதுடன் அவரது கைகளில் பூச்செண்டொன்று காணப்பட்டுள்ளது, அதற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த இருவரும் கணவன் - மனைவி என்றும், சட்டபூர்வமாகத் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து, சுமார் ஐந்து வருடங்களாகத் தனித்தனியாக வசித்துவந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஆண்,குறித்த பெண்ணைக் கொலை செய்த பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த தம்பதிகளுக்கு பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் , அவர்கள் இணைந்து வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலை அல்லது தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment