Header Ads

test

நாளைய தினம் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி கோட்டபாய.

 அரசாங்கத்திற்குள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலமையில் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில் நாளை மாலை விசேட ஆளுங்கட்சி கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. ஆளும் சிறிலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் நிலவிவருகின்ற பசளைப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் இந்தச் சந்திப்பில் அதிகமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தற்போது ஆளுங்கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலைக்குள் இந்தச் சந்திப்பானது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

விசேடமாக, கூட்டணிக்குள் உள்ள முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினர் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.

மறுபக்கத்தில் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்குள் உள்ள விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினரும் எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் நாளைய தினம் நடைபெறவுள்ள அரச தலைவர் தலைமையிலான கூட்டத்திற்குச் செல்வதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யவுள்ளதாக மைத்திரி மற்றும் விமல் அணியினர் தெரிவித்துள்ளனர்.



No comments