சிறிதரனின் பேச்சால் நிலைகுலைந்து வெகுண்டெழுந்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இனவாதக் கருத்துக்களை பதிவு செய்வதாகவும், அவற்றை நாடாளுமன்ற பதிவிலிருந்து நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் சிறுவர் தினத்தைக் கொண்டாடும் அதேவேளை பாலகன் பாலச்சந்திரனை இரக்கமற்ற வகையில் இராணுவம் சுட்டுக்கொன்றதாக பா.உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இடையில் குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை எனவும், மாறாக பயங்கரவாத்திற்கு எதிராகவே யுத்தத்தினை நடத்தியிருந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு இனவாதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் பேசிய கருத்துக்களை நாடாளுமன்ற பதிவிலிருந்து நீக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
Post a Comment