Header Ads

test

பயணத்தடையை மீறி பயணித்த பேருந்து இராணுவத்தினரால் மடக்கிப்பிடிப்பு.

 அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரியநீலாவணை இராணுவ காவலரனில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் போது குறித்த இரு வேறு பஸ் வண்டிகளிலும் சுமார் 100க்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்த விஜயகோன் சுகாதார தரப்பு அதிகாரிகளினால் பயணிகள் அனைவரும் அறிவுறுத்தபட்டு மீண்டும் குறித்த பஸ்களில் அழைத்து செல்லப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பஸ் வண்டிகளின் சாரதி நடத்துனர்களிடம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Gallery

No comments