இலங்கை விமானப்படை வானில் செய்த செயலால் ஆச்சரியத்தில் மக்கள்.
இலங்கை விமானப்படையினர் முன்னெடுத்து வரும் வானிலிருந்து விதைகளை தூவும் திட்டத்தின் 5வது கட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் ஆலோசனையின்படி அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பியம்பலாண்டுவ பிரதேசத்தில் வத்தேகம கெபிலித்த வனப்பகுதியின் 75 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளடங்கும் வகையில், மரங்களுக்கான 80 ஆயிரம் விதைகள் தூவப்பட்டதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப்படையின் வீரவில முகாமை அடிப்படையாக கொண்டு விமானப்படை ஹெலிக்கொப்டர் மூலம் விதைகள் தூவப்பட்டுள்ளன.
2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை காடுகளின் பரப்பளவை 27 வீதம் முதல் 32 வீதம் வரை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் விமானப்படையினர் கூறியுள்ளனர்.
Post a Comment