இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையின் மூர்க்கத்தனமான தாக்குதல் - சாணக்கியன் எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.
மட்டக்களப்பு - ஏறாவூரில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போக்குவரத்து காவல்துறை அதிகாரி மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் "காவல்துறை மிருகத்தனமானது மட்டக்களப்பில் தொடர்கிறது" என்றும் பதிவிட்டுள்ளார்.
Police Brutality continues in Batticaloa and will fall on the deaf years of @ReAdSarath pic.twitter.com/eX9ApSsNBH
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) October 22, 2021
Post a Comment