பால் குடித்து தூங்கிய குழந்தை சடலமாக மீட்பு.
சாவகச்சேரி பகுதியில் இரவு நேரத்தில் பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசைவற்று கிடந்த குழந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பள்ளி வளவு தனங்கிளப்பு வீதியைச் சேர்ந்த அபூ ஹுரைறா ஹாஜர் என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment