நாட்டின் விவசாய செயற்பாட்டிற்கு இராணுவத்தின் பூரண ஒத்துழைப்பு - கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தங்களது விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை (Shavendra Solva) சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது தமது தேவைகளை அரச தலைவரின் கவனத்திற்கு கொண்டு வருமாறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அத்தோடு கவனிக்கப்படாத அரச நிலங்களை விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் விவசாய திட்டங்களுக்கு இராணுவ ஒத்துழைப்பை வழங்குவதாக ஜெனரல் சவேந்திர சில்வா உறுதியளித்ததுடன் அரச தலைவரின் சேதன பசளை திட்டம் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
அத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை கொண்டுவர கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் உள்ள இராணுவ தளபதிகளை ஒவ்வொரு மாதமும் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் பிரதிநிதிகளிடம் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டார்.
Post a Comment