Header Ads

test

ரிஷாட் பதியுதீனின் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் - பாராளுமன்றத்தில் அமளிதுமளி.

 ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியின் நாற்பது நாடாளுமன்றஉறுப்பினர்கள் ரிசாட் பதியுதீனுக்கு(Rishad Bathiudeen) எதிரான குற்றச்சாட்டுகளை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கோரி கையெழுத்திட்ட கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம்(Mahinda Yapa Abeywardena) கையளித்துள்ளனர்.

அந்த கடிதத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் அல்லது உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் தலைமைச் செயலாளர் லக்ஷ்மன் கிரியெல்ல(Lakshman Kiriella) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் (Ranil Wickremesinghe)நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.


No comments