Header Ads

test

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி.

பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள, பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி தெளிவான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து ஆசிரியரே செய்கிறார் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
 
இத்தகைய பெருமைக்குரிய மற்றும் கௌரவமான தொழிலில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் இன்று எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிவு, ஞானம் மற்றும் ஒழுக்கத்துடன் மேலும் பல குழந்தைகளை உருவாக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments