ஒரே வீட்டில் கணவன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - பெற்றோரை தேடி கதறும் குழந்தை.
மீரிகம - லிந்தரா பகுதியில் உள்ள வீட்டில் அறை ஒன்றிலிருந்து இளம் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் கைகள் பின்னால் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையிலும், பெண்ணின் சடலத்திற்கு அருகிலேயே அவரது கணவனரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
கணவரே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டபின்பு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததுடன், இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த நபர்கள் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், குறித்த வீட்டில் அப் பெண் தனியே நின்றிருந்த போது குடும்ப உறுப்பினர்கள் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றுள்ளனர்.
இதையடுத்து, பெண்ணின் கணவர் திருமண வீட்டில் உறவினர்களிடம் மகனை ஒப்படைத்து பின்பே இக் குற்றத்தை செய்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Post a Comment