Header Ads

test

இலங்கையர்களுக்கு அடித்தது அதிஸ்டம் - இலங்கை இந்திய கப்பல் போக்குவரத்திற்கு பச்சைக்கொடி.

 காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என இந்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் இடம்பெறும் கடல் சாகசப் பயணத்தை முன்னிட்டு என்.சி.சி மாணவர்கள் இன்று புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆரம்பித்து கடல் வழியாக காரைக்காலுக்குச் செல்கின்றனர்.

இந்தப் பயணத்தை ஆளுநர் தமிழிசை பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன்போது கருத்து தெரிவித்த தமிழிசை,

புதுவையிலும் சுற்றுலா துறையை வளர்க்க கடல் பயணம் மூலம் காரைக்காலுக்குச் செல்ல முன்னோட்டமாக அமையும். காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு ஏற்கனவே கப்பல் போக்குவரத்து இருந்துள்ளது.இது திடீரென நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் ஆரம்பிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதுகுறித்து இலங்கை அமைச்சர்கள், தூதர்கள் பேசியுள்ளனர்.

வெளியுறவுத்துறையில் சில அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது. அதன்பின் இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடருமென அவர் தெரிவித்துள்ளார். 


No comments