மின்சாரம் தடைப்பட்டதால் அநியாயமாக உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன்,சம்பவத்தில் புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து பவிசாந்த்(வயது21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன் மழை மூட்டமாகவும் காணப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment