Header Ads

test

கீரிமலையில் குளிக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த பெரும் சோகம்.

 யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில்   சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார்.

தனது நண்பர்கள் இருவருடன் கீரிமலை கடலில் இன்று நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.






No comments