Header Ads

test

கிளிநொச்சியில் மின் தகன நிலையம் அமைக்க தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நிதிப்பங்களிப்பு.

 கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான மின் தகன நிலையமொன்றை திருநகர் மயானத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து, மயான அபிவிருத்திக் குழு ஒன்றினை அமைத்து அதனூடாக இச்செயற்றிட்டம் நிறைவேற்றும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் இருபத்தி ஐந்து மில்லியன் ரூபாக்கள் தேவைப்படுகின்ற போதும் இலங்கை அரச இயந்திரங்கள் நிதி வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தாயக மற்றும் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்புடன் இத் திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மயான அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க கிளி பீப்பிள் அமைப்பினால் நேற்றைய தினம் சனிக்கிழமை ஒக்டோபர் 2ஆம் திகதி மெய்நிகர் வழியாக கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்டம் தொடர்பான செயற்றிட்ட அதிகாரிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இக்கலந்துரையாடலில் நலன் விரும்பிகள் சுமார் நான்கு மில்லியன் ரூபாக்களை (Rs 4,250,000.00) நன்கொடையாக வழங்க முன்வந்தனர்.

இத்திட்டத்துக்கு நேற்றைய நிகழ்வுடன் சுமார் பன்னிரண்டு மில்லியன்கள் ரூபாக்களுக்கு மேல் சேகரித்த நிலையில், மீதி நிதிக்காக நல்ல மனம் கொண்ட கொடையாளிகளையும், தொண்டு அமைப்புக்களையும் கிளி பீப்பிள் அமைப்பு அனைவரது சார்பாகவும் வேண்டி நிற்பதாக அதன் தலைவர் வைத்தியர் சதானந்தன் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் சுமார் நாற்பது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நலன் விரும்பிகள் கலந்துகொண்டிருந்தனர்.


No comments