Header Ads

test

நாட்டில் இன்னும் மூன்று மாதங்களில் கொரோனா ஐந்தாம் அலை.

 நாட்டின் சில அமைச்சர்களின் நடவடிக்கை காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களில் மேலும் ஒரு அலை உருவாக அதிக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெருமளவில் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு அனுமதி வழங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் விடயமாகும். இந்த செயல்கள் காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களில் கொரோனாவின் அடுத்த அலை உருவாகும்.

ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசியின் செயல்பாடுகள் வெறும் ஆறு மாதங்கள் வரையில் தான் தாக்குப்பிடிக்கும் என தெரியவந்துள்ளது. 

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் மற்றவர்களுக்கு ஏற்படாது. ஆனால் மக்கள் கொரோனா பற்றி மிகவும் அசமந்தமாக செயல்பட்டால் வருகிற டிசம்பர் மாதத்தில் கொரோனாவின் ஐந்தாவது அலை நிச்சயம் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


No comments