நாட்டில் கரும் பூஞ்சை நோயினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றின் பின்னர் ஏற்பட்ட கரும் பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனைகளில் அவர் கரும் பூஞ்சை நோயினால் பீடிக்கப் பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Post a Comment