திருமலை மீனவர்களுக்கு அள்ளிக்கொட்டிய கடலன்னை.
திருகோணமலை - கொட்பே கடற்கரை பிரதேசத்தில் கரைவலையில் 3000 கிலோ விற்கும் அதிக பாரை மீன்கள் நேற்று (01) பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏட்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவித்தப்பட்டுள்ள நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கே இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.
இவ்வாறு பிடிபட்ட பாரை மீன்களின் பெறுமதி சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment