Header Ads

test

கிராமசேவகர் கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்.

   அம்பன்பொல தெற்கு பகுதி கிராமசேவகர் யூ.எஸ்.எம்.கபில பிரியந்த சபுகுமார (51) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிராம சேவகரை கூலிப்படையை ஏவி கொலை செய்த குற்றச்சாட்டில் , கல்கமுவ புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக ஒன்றரை இலட்சம் ரூபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரிக்கும், பிறிதொருவருக்குமிடையில் ஏற்பட்ட நில தகராற்றில், கிராம சேவகர் பக்கச்சார்பாக நடந்ததாக கூறி, அவரை பழிவாங்கவே இந்த கொலை இடம்பெற்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கைதான புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரிக்கும், கொலை சந்தேகநபர் ஒருவருக்கும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments