யாழில் வாள்வெட்டுக் குழுவை தலைதெறிக்க ஓட வைத்த இராணுவத்தினர்.
யாழ்ப்பாணம் புத்துார் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த ரவுடிகள் இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தலைதெறிக்க தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை ஆவரங்கால் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இரு குழுக்கள் மோதலுக்கு தயாராக இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இராணுவத்தினர் குறித்த இடத்துக்கு சென்றுள்ளனர்.
இதன்போது 6 மோட்டார் சைக்கிள்களில் வன்முறைக்கு தயாராக இருந்த குழுவினர், இராணுவத்தை கண்டதும் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இதனையடுத்து தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்ய இராணுவத்தினரும், அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment