Header Ads

test

தமிழ்மொழியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ புறக்கணித்தாரா - எழுந்துள்ள புதிய சர்ச்சை.

 நாட்டின் முதல் பிரஜையான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கை இராணுவம் நிறுவப்பட்டு 72 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஒர் அங்கமாக கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) இராணுவ மைதானமொன்றை அனுராதபுரத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்த மைதான அங்குரார்ப்பண நிகழ்வின் போது, குறித்த விளையாட்டரங்கின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழி உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இதனைக் கண்ணுற்ற மனோ கணேசன், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் குறித்த விளையாட்டரங்கின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து தேசிய மொழிகள் தொடர்பான முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது அதிருப்தியை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.


No comments