Header Ads

test

நாட்டில் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவித்தல்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என கொவிட் தடுப்புக்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது.

கொவிட் தடுப்புக்கான விசேட செயலணி இன்று முற்பகல் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், மக்கள் ஒன்று கூடும் பட்சத்தில், கொரோனா மீண்டும் பரவும் அபாயம் உள்ளது.

இதனால், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர், அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார தரப்பினரிடம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa)மெலும் தெரிவித்துள்ளார்.


No comments