ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றுடன் நிறைவடைந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்படுவது மூன்றாவது தடவையாகும்.
Post a Comment