பாரிய விபத்தில் சிக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம்.
வவுனியா,செட்டிகுளம் பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருது,
வவுனியா நோக்கி பயணம் மேற்கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரது வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.
குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை செட்டிகுளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment