பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்கள் பாடசாலை திறப்பை கோரியதால் வெடித்தது சர்ச்சை.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் அனைத்து திறப்புகளையும் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினர் க. திலீபனுக்கு எந்த அதிகாரமும் இல்லையென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் நேசராஜா தெரிவித்துள்ளார்.
புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை திறப்புகளை வலயக் கல்வித் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு பா.உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், அது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் நேசராஜா கூறுகையில்,
அதிபர், ஆசிரியர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொழிற்சங்கப் போராட்டம், திறப்புகளை ஒப்படைக்குமாறு அதிபரிடம் எவரும் கேட்க முடியாது. அவ்வாறான ஒரு தேவை இருப்பின், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக அறிவுறுத்தல் கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கட்டளையிட முடியாது என்றும், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு திறப்பை ஒப்படைக்குமாறு கூறவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment