Header Ads

test

இந்து ஆலயங்களை தொடர்ச்சியாக அவமதிக்கும் இலங்கை காவல்துறை.

 இந்து மத நியமங்களை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற காவல்துறை அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று நண்பகல் வருகை தந்துள்ள காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்ன(C.D.Wikramaratna) வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலய வெளி வீதியில் சப்பாத்துக்களை கழற்றிவிட்டு ஆலயங்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் காங்கேசன்துறை மூத்த காவல்துறை அத்தியட்சகர் சப்பாத்துக்களை கழற்றாது ஆலயங்களுக்குள் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளதோடு, காவல்துறையினரின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் இதனை மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவுள்ள மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajabaksha) கவனத்தில் எடுத்து காவல்துறையினரின் இத்தகைய கீழ்த்தரமான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



No comments