Header Ads

test

திருகோணமலையில் தனியார் ஹோட்டலில் சிறுவன் உட்பட்ட மூவர் எடுத்த விபரீத முடிவு.

 திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜவரோதயம்வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட சிறுவர் ஒருவரும் நஞ்சருந்திய நிலையில் இன்று மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியிலிருந்து 29, மற்றும் 19 வயதுடைய இரு பெண்கள் மற்றும் இரண்டரை வயதுடைய சிறுவன் உட்பட மூவர் திருகோணமலையிலுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று தங்கி இருந்துள்ளனர்.

இன்று (10) காலை 11 மணி வரை கதவை திறக்காததன் காரணமாக ஹோட்டல் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

 இதனையடுத்து அங்குவருகைதந்த காவல்துறையால் குறித்த நபர்கள் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் மதுவுடன் நஞ்சினை சேர்த்து அருந்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது இருந்தபோதிலும் இவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.


No comments