இலங்கை அரசியலில் புதிதாக களமிறக்கப்படவுள்ள மற்றுமொரு ராஜபக்ஷர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷ வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன. அந்த வகையில் வரும் வருடம் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோஹித்த ராஜபக்ஷ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை குருநாகல் மாவட்டத்தின் பிலபல்யமான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரோஹித்த ராஜபக்ஷவை வெல்லவைப்பதற்காக ராஜபக்ஷ குடும்பத்தினர் தயாசிறி ஜயசேகரவை போட்டியிட இடமளிக்க மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment