இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எங்கே - கதறும் உறவுகள்.
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, எங்கே எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பியிருந்ததோடு, உங்கள் இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள், தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா, ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா போன்ற பதாதைகளை ஏந்தியவன்னம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் மூலமே எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருக்கிறோம், எமக்கு சர்வதேசமே பதில் வழங்க வேண்டும் எனக் தெரிவித்தனர்.
Post a Comment