Header Ads

test

நாட்டை வந்தடையவுள்ள ஒரு தொகுதி அரிசி.

 நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி கொழும்பு துறை முகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அரிசியின் முதல் தொகுதி இன்று (10) கொழும்பு துறைமுகத்தை வடந்தடையவுள்ளது.

குறித்த அரிசி ஒரு கிலோ ரூபா 100 ரூபாவிற்கு குறைவாக சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்களில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சில அத்தியாவசிய பொருட்களை எதிர்வரும் காலப்பகுதியில் இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.


No comments