Header Ads

test

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி.

 எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை கடந்த நாட்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில், நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக  குறைவடைந்து வருகின்ற நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments