Header Ads

test

நாட்டின் ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்துதல்.

 க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகள் சுகாதாரத் துறையினால் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (29) இடம்பெற்ற கொரோனா ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்று நோய் காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அரச தலைவரால் தெரிவிக்கப்பட்டது.


No comments