உலகத் தமிழருக்காய் கண் விழித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.
வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K Stalin) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழினம் மற்றும் தமிழ் மக்களின் பெருமைகளின் விபரிப்பைச் செய்த முதல்வர் ஸ்ராலின், தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டத்தின் அடிப்படையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான இந்த புதிய வாரியம் அமைக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த வாரியத்தில் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேர் பங்கெடுப்பார்கள் எனவும் மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு 5 கோடி ரூபாயில் புலம்பெயர் தமிழர் நலநிதி என்ற ஒரு நிதிக்கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய இனமான தொன்மை மிக்க தமிழினம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்வதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குத் தமிழகமே தாய்வீடு போன்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் திகதி புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாகக்' கொண்டாடப்படுமெனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Post a Comment