Header Ads

test

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸார்.

 யாழ். வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினரொருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால் பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் ஊரெழு பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது தலைக்கவசம் இன்றி இருவர் ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களை இடைமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்று தண்டப்பணம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளமையினாலேயே இச் சம்பவம் நேர்ந்துள்ளது.


No comments