Header Ads

test

அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் கடகம் வரையான ராசிகளுக்கான பலன்கள் எவ்வாறு அமையப்போகின்றது.!!!

  மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கான  அக்டோபர் மாத ராசிபலன்கள் எப்படி அமையப்போகின்றது என்பதனை பார்க்கலாம்.

மேஷம்:

இந்த மாதம் உங்களுக்கு பல வழிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றாலும், அதே அளவுக்கு பணிச்சுமையும், கவனமாகவும் இருப்பது அவசியம். குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். உங்களின் பொருளாதாரம் மேன்மை அடையக்கூடியதாக இருக்கும். திருமணமான தம்பதிகள் ஒற்றுமையுடன் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். உங்களின் தொழில், வியாபாரத்தில் இருக்கும் பிரச்சினைகளைச் சிறப்பாகக் கையாள்வீர்கள். வீடு, வண்டி, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உள்ளன. உணவு விஷயத்திலும், உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

இருந்த நிதி நிலை பிரச்னைகள் நீங்கி நன்மை ஏற்படும். உங்களுக்கு வர வேண்டிய பணம், பொருள் வந்து சேரும் என்பதோடு, நீங்கள் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். சொத்துக்கள் சார்ந்த விஷயத்தில் சாதகமானதாக முடிவு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். இருப்பினும் உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சு, விவாதம் பிரச்னையை அதிகரிக்கக்கூடும். சிறிய விஷயங்கள் பெரிய வாக்குவாதமாக மாறும் என்பதால் கவனமுடன் பேசுங்கள்.

மிதுனம்:

இந்த மாதம் முழுவதும் பல அற்புத பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். மனதில் மகிழ்ச்சியும், கை நிறைய பணம் என ஒரு நிறைவான மாதமாக இருக்கும். உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் சில சாதகமான நிகழ்வுகள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உயர்வு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் வேலையில் முன்னேற்றமும், பதவி, பாராட்டு கிடைக்கும். உங்களுக்கு இருந்த குழப்பமான மன நிலை நீங்கி, தெளிவான முடிவெடுப்பீர்கள். எதை செய்தாலும் அது உங்களுக்கு சாதகமான முடிவைத் தரும். குடும்பத்திலும், பணியிடத்திலும் அனுசரித்துச் செல்வது அவசியம். மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்:

கசப்பான விஷயம் என கலந்த பலன்கள் உண்டாகும். இந்த மாதத்தில் குடும்பம் மற்றும் பணியிடத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். குடும்பம், பணியிடம் என எந்த ஒரு சூழலாக இருந்தாலும் பேச்சைக் குறைத்து, சற்று பொறுமையுடன் விஷயங்களைக் கையாள்வது அவசியம். ஆரோக்கியம் சற்று பிரச்னை தரக்கூடியதாக இருக்கும். சமூகத்தில் சில மோசமான நிலை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும்.


No comments