Header Ads

test

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற பதை பதைக்கும் சம்பவம்.

 மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (18) இரவு 10.00 மணியளவில் மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் மதுரங்குளி கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  

கொலை செய்யப்படவரின் சடலம் நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பனவற்றின் பின்னர்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், முந்தல் பொலிஸாருடன், தடவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments