கணவன் மனைவிக்கிடையில் தகராறு - தீயில் எரிந்த பெண்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார், யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண்ணின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்து 01.10.21 அன்று காலை இடம்பெற்றுள்ளது.
22 அகவையுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தீப்பற்றி எரிந்து தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த 05.10.21 அன்று இவரின் கணவன் மல்லாவி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 13.10.21 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த கணவனின் தாயார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், குடும்ப தகராறில் குறித்த பெண் தனக்குத் தானே தீயினை பற்ற வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிந்த பெண்ணின் தயார் கூறுகையில், தனது பிள்ளையினை எரித்த கணவனின் செயற்பாட்டிற்கு சரியான தீர்வு கிடைக்கவேண்டும் என காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணின் இரண்டரை அகவையுடைய பிள்ளை தந்தையின் தாயாரின் அரவணைப்பிலேயே தற்போது உள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment