எதிர்வரும் திங்களன்று நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.
நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் எரிவாயு, கோதுமை மாவு மற்றும் சிமெந்து ஆகியவற்றின் புதிய விலைகள் குறித்த முடிவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது.
இறக்குமதியாளர்கள் இந்தப்பொருட்களுக்கான விலைகளை அதிகளில் அதிகரிக்கச் சொன்னதை அடுத்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) எரிவாயு நிறுவனங்கள் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரை சுமார் ரூ .1000 க்கும், சிமெந்து நிறுவனங்கள் ஒரு பைக்கற் சிமெந்தின் விலையை ரூ .180 க்கும், கோதுமை மாவு நிறுவனங்கள் கிலோ ரூ .20 க்கும் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Post a Comment