நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞர்களின் செயலால் முழுக் கிராமமே சோகத்தில்.
பதுளை ஹெலி-எல பகுதியிலுள்ள எல்ல நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற இரு இளைஞர்கள், தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ் அனர்த்தத்தில் வீரகெட்டிய, தெஹியத்தகண்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுகளையுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment