மனித சடலத்தை இழுத்துச் செல்லும் இராட்சத முதலை - கொழும்பில் சம்பவம்.
சிறி ஜெயவர்த்தனபுர கோட்டையில் உள்ள கிம்புலாவலவில் உள்ள தியவன்ன ஓயாவில் முதலை ஒன்று மனித சடலத்தை இழுத்துச் செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியவன்ன ஓயாவில் ஆண் ஒருவரின் சடலத்தை வாயில் கடித்து இழுத்துக் கொண்டு இராட்சத முதலை மிதந்து வருவதை பொது மக்கள் அவதானித்துள்ளதுடன், காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
நேற்று மாலை 5.45 மணியளவில் நாடாளுமன்ற பகுதியிலிருந்து குறித்த முதலை மனித சடலத்துடன் கிம்புலாவல பாலத்திற்கு வந்துள்ளது.
மேலும் பாலத்திற்கு கீழே சென்ற முதலை சடலத்தை விட்டுச்சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தொடர்பான அடையாளம் இதுவரை காணப்படவில்லை.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment