Header Ads

test

இலங்கையில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்.

 வத்தேகம பொலிஸ் பிரிவில் மீகமவத்த பிரதேசத்தில் இரு தரப்பினருக்கடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததில் மின் கம்பியில் சிக்க வைத்து ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மோதலில் , நபரொருவரின் வீட்டு வளாகத்திற்குள் சென்று தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்த போது , குறித்த வீட்டு உரிமையாளரால் வைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்க வைத்து குறித்து நபரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதுடைய யட்டிராவண - வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மின் கம்பியை வைத்திருந்த 50 வயதுடைய மீகமவத்த பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளரான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments